ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் புலி. அவருடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமைய்யா, இமான் அண்ணாச்சி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா ஆகஸ்ட் 2-ந்தேதி நடக்கிறது.
முன்னதாக, நேற்று சென்னையில் புலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது இயக்குனர் சிம்புதேவன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய் கலந்து கொள்ளவில்லை.
அப்போது தேவி ஸ்ரீ பிரசாத் புலி படத்தைப்பற்றி கூறும்போது, இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை பட்டியலிட்டு முதலில் என்னிடம் சிம்புதேவன் சொன்னபோது நான் நம்பவேயில்லை. காரணம். இத்தனை பெரிய நடிகர்களை ஒரே படத்தில் இணைப்பது என்பது சாதாரண விசயமல்ல. ஆனால் அவர் அத்தனை பேரிடமும் கால்சீட் வாங்கியாச்சு என்று அடித்து சொன்னார். அதன்பிறகுதான் நம்பினேன்.
மேலும் இதற்கு முன்பு விஜய் சார் படங்களுக்கு இசையமைத்ததை விடவும் இந்த படத்தில் பிரமாதமான இசையை கொடுத்திருக்கிறேன். அதோடு, இந்த புலி போன்ற சரித்திர படங்களில் விஜய் சார் மாதிரியான மாஸ் ஹீரோக்கள் நடிப்பது பெரிய விசயம். இதில் நடிப்பதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும். அது விஜய் சாரிடம் உள்ளது. எல்லோராலும் இது முடியாத விசயம் என்றார்.