ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விஜய் படங்களில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் படம் புலி. இந்த படத்தில் விஜய் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். அவருடன் ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், தம்பி ராமைய்யா உள்பட பலர் நடித்துள்ளனர். சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த சரித்திர படத்தின் ஆடியோ விழா ஆகஸ்ட் 2-ந்தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடப்பதாகவும், அதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அந்த விழாவை மேலும் பிரமாண்டப்படுத்தும் முயற்சியாக, கமல், சிரஞ்சீவி மற்றும் மகேஷ்பாபு ஆகிய முன்னணி நடிகர்களை அழைத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். அந்த வகையில், ஸ்ரீதேவி சிரஞ்சீவியையும், ஸ்ருதிஹாசன் கமல்ஹாசனையும் அழைத்து வருவதாக உறுதி அளித்திருக்கிறார்களாம். அதனால் விஜய்யின் புலி ஆடியோ விழா பெரிய அளவில் களைகட்டும் என்று தெரிகிறது.