ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி நடித்துள்ள திரைப்படம் புகழ். ஃபிலிம் டிபார்ட்மென்ட் சுஷாந்த் பிரசாத் தயாரிப்பில் வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா வெளியிடும் 'புகழ்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்ஷ்ன் நிறைந்த இந்த டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஆக்க்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் 'ஜெய்' தனது ரொமாண்டிக் ஹீரோ தடத்திலிருந்து வேறுபட்டு ஒரு வலிமைமிக்க எதார்த்தமான அக்க்ஷன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக கார் ரேஸில் ஈடுபடுவதன்மூலம் தன்னுடைய இமேஜை பெரிதளவும் மாற்றிக் கொண்டுள்ள ஜெய் இந்த அக்க்ஷன் ஹீரோ கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மேலும், அரசியலை பின் புலனாக கொண்ட இந்த 'புகழ்' படத்தில் ஜெய்யின் கதாப்பாத்திரம் அவரது நட்சத்திர அந்தஸ்துக்கு மெருகேற்றுவதாய் அமையும் என்பது திண்ணம்.