ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
டோலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நாயகன் கல்யாண் ராம் நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. வசூலில் பெரும் சாதனை படைத்த அப்படத்தை இயக்குநர் அணில் ரவிபுதி இயக்கியிருந்தார்.இப்படத்தை தொடர்ந்து கல்யாண் ராம் ஷேர் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் மல்லிகார்ஜுனா இயக்கும் இப்படத்தில் நடிகை சோனல் சவுகான் நயாகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு தற்போது பாங்காங்கில் நடைபெற்று வருகின்றது. இப்பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஜூலை 10 ஆம் தேதி இப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்புகள் முடிவடையும் என கூறப்படுகின்றது. அதன் பின்னர் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கும். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். தயாரிப்பாளர் வெங்கடேஷ் இப்படத்தை தயாரிக்கின்றார்.