ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு காதலத்தில் பாடல் ஒலிப்பதிவுக்கூடம் என்பது பரம ரகசியமான ஒரு பகுதி. இசை அமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் தவிர வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது. இளையராவின் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்குள் போய் வந்தால் திருப்பதி மூலஸ்தானத்துக் போய் வந்த மாதிரி. ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாகிவிட்டது. இசை அமைப்பாளர்களின் ஒலிப்பதிவு கூடத்தின் சந்து பொந்தில்கூட வீடியோ கேமராக்கள் புகுந்து வெளிவருகிறது.
ஒரு படத்திற்கு இப்போது விளம்பரம் ரொம்ப முக்கியம். எந்த வடிவத்திலாவது படத்தையும், பாடலையும் மக்களுக்கு கொண்டு சென்றே ஆக வேண்டும். அதற்கு ஒரு வழியாக மாறியிருப்பது சாங் மேக்கிங் வீடியோக்கள். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் "ஒய் திஸ் கொல வெறி'' பாடல்தான் இந்த டிரண்டை துவக்கி வைத்தது. படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியை விட மேக்கிங் வீடியோதான் வைரல் ஹிட்டானது. அன்று முதல் எல்லோரும் இதனை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள். இப்போது எல்லா படத்திற்கும் சாங் மேக்கிங் வீடியோக்கள் வரத் தொடங்கிவிட்டது.
அதிலும் கொஞ்சம் கமர்ஷியல் அம்சம் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் நடிகைகளை பாட வைத்து அந்தப் பாடலின் மேக்கிங் வீடியோக்களை வெளியிடுகிறார். நேற்று மட்டும் வில் அம்பு படத்தில் அனிருத் பாடிய ஒரு பாடலின் மேக்கிங் வீடியோவும், கொழம்பி என்ற படத்திற்கு லட்சுமிமேனன் பாடிய பாடலின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். விளம்பர வெறியில் அடுத்து என்ன கான்செப்ட் பிடிக்க போகிறார்களோ தெரியவில்லை.