ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபு தேவாவும், ஜெயம் ரவியும் எங்கேயும் காதல் படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். அந்தப் படம்தான் ஹன்சிகாவின் முதல் படம். தற்போது ஜெயம்ரவி, ஹன்சிகா இணைந்து நடித்த ரோமியோ ஜூலியட் படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அதன் இயக்குனர் லக்ஷ்மண், இருவர் காமினேஷனுக்கு இன்னொரு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார். அதில் இன்னொரு ஹீரோ நடிக்க வேண்டும். அது கரடு முரடான ஹீரோவாக இருக்க விரும்பி. அந்த கேரக்டரில் பிரபுதேவாவை நடிக்க கேட்டிருக்கிறார்.
கதையைக் கேட்ட பிரபுதேவா "இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன். நான் நடிக்கவில்லை. எனக்கு பதில் வேறு யாரையாது நடிக்க வையுங்கள்" என்று கூறியிருக்கிறார். இப்போது அந்த கேரக்டருக்கு விஜய்சேதுபதியை கேட்டிருக்கிறார்கள். இமான் இசை உள்பட ரோமியோ ஜூலியட் டெக்னிக்கல் டீம் அப்படியே இதிலும் பணியாற்ற இருக்கிறது.