ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தில்லாலங்கடி படத்திற்கு பிறகு ஜெயம் ராஜா, ஜெயம் ரவி பிதர்ஸ் மீண்டும் இணையும் படம் - தனி ஒருவன். ஜெயம் ரவிக்கு ஜோடியாக, நயன்தாரா நடிக்கும் தனி ஒருவன் படத்தை ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பல மாதங்களாகிவிட்டன. சில பிரச்னைகளால் இழுத்துக் கொண்டிருந்த தனி ஒருவன் படம் ஒருவழியாக அண்மையில் முடிவடைந்தது. படப்பிடிப்பு முடிந்துவிட்டதை தொடர்ந்து இப்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹிப் பாப் தமிழா ஆதி இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்களை இம்மாதம் 15 ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ளார்கள்.