ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, நடிகைகள் ராதிகா ஆப்தே மற்றும் சோனல் சௌகன் நடித்த லெஜண்ட் திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அப்படத்திற்கு பின்னர் பாலகிருஷ்ணா நடித்த லயன் திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது பாலகிருஷ்ணா தனது 99வது படமான டிக்டேட்டர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை லௌக்கியம் பட புகழ் இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்குகின்றார். ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இரண்டாவது நாயகிக்கான தேர்வு நடைபெற்று வந்தது. லெஜண்ட் படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த சோனல் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்டத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மூன்றாம் வாரத்திலிருந்து துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.