ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க, சூப்பர்மேன், அயர்ன்மேன் மாதிரி சூப்பர் ஹீரோவாக நடிக்க தனியாக இண்டர்வியூ வைத்து நடிகர்களை தேர்வு செய்வார்கள். அமெரிக்க இளைஞர்களுக்கு சூப்பர் பவர் கேரக்டர்களில் நடிப்பது பெரிய கனவாக இருக்கும். இதுவரை வெளிவந்த ஸ்பைடர் மேன் படங்களில் முதல் பாகத்தில் டோபி மகியூரும், இரண்டாம், மூன்றாம் பாகத்தில் ஆண்ட்ரூ கார்பீல்டும் நடித்தனர்.
அந்த வகையில் 4ம் பாகத்துக்கான ஸ்பைடர் மேனை தேர்வு செய்ய கடந்த சில மாதங்களாக ஆடிசன் நடந்து வந்தது. இதில் டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேனாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை படத்தை தயாரிக்கும் சோனி பிக்சர்ஸ் நிறுவனமும், மார்வெல் ஸ்டூடியோ நிறுவனமும் அறிவித்துள்ளது. டாம் ஹாலண்ட் ஏற்கெனவே தி இம்பாசிபிள், கேப்டன் அமெரிக்கா, சிவில் வார் உள்பட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். புதிய ஸ்பைடர் மேனை ஜான் வாட்ஸ் இயக்குகிறார், 2017ம் ஆண்டு வெளிவருகிறது.