ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், நாளை முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதையடுத்து, தமிழக காவல்துறை கட்டாயமாக வாகனஓட்டிகள் பின்பற்றும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர், ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, நடிகர் கமல்ஹாசன், ஒரு வீடியோவில் பேசியுள்ளார். அதில் கமல் கூறியிருப்பதாவது, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலையைப் பாதுகாக்க, கட்டாயம் தலைக்கவசம் அணியுங்கள். இதைப் பற்றி நாங்கள் கூறினால் நீங்கள் தலைக்கவசம், அணியாமல் தானே படத்தில் வண்டி ஓட்டுகிறீர்கள் என்று எதிர்வாதம் செய்யாதீர்கள்.
சினிமா வேறு.... வாழ்க்கை வேறு....: சினிமாவில் நாங்கள் நடிக்கும் போது எங்கள் அருகினில் பாதுகாப்புக்கு என்று, ஏராளாமான பேர் நிற்கிறார்கள். நாங்கள் நடிப்பதை பாதுகாப்புடன் தான் செய்து கொண்டிருக்கிறோம், அதனால் எங்களைப் பார்த்து விட்டு நீங்கள் தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்ட வேண்டாம்.
சினிமாவில் சூப்பர்மேன் பறந்து போகிறார், உங்களால் அது போன்று செய்ய முடியுமா? மேலும் நீங்கள் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியில் பார்களில் தொங்குவார்கள் உங்கள் வீட்டு பைப்புகளில் அது போன்று செய்ய முடியுமா? அது போன்று தலைக்கவசம் அணிவதையும் சிந்தித்துப் பார்த்து செய்யுங்கள்.