கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி அதன் வெற்றி, பரபரப்பு, புகழ், இயக்குநர் பதவி எல்லாவற்றையும் கழற்றிவைத்து விட்டு விஷால் நடிக்கும் பாயும் புலி க்காக மரக்காணம் அருகே கொளுத்தும் வெயிலில் பிரமாண்ட செட்டில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார் வேல்ராஜ்.
அவரிடம் இயக்குநராகி விட்டு மீண்டும் ஒளிப்பதிவாளராக வேலைபார்ப்பது பற்றிக் கேட்ட போது... இதை ஒன்றும் நான் டிபிரமோஷனாக நினைக்கவில்லை. ஒளிப்பதிவாளர் ஆவது தான் என் கனவு விருப்பம். இயக்குநரானதே இடையில்தானே? இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் ஒளிப்பதிவாளர் மட்டுமே. ஒளிப்பதிவாளர் பணியில் என்னுள்ளே இருக்கும் இயக்குநர் வெளிப்படவே மாட்டார். இயக்குநர் என்கிற விஷயத்தை நான் சுமப்பதில்லை அதை நான் என் தலைக்குள் ஏற்றுவதில்லை. நான் என்றும் ஒளிப்பதிவாளர்தான், இயக்குநர் வாய்ப்பு இடையில் வந்ததுதான் என்றார்.
விஐபி 2 எந்த நிலையிலுள்ளது என்றபோது விஐபி2 என்று எல்லாரும் சொல்கிறார்களே தவிர அது முற்றிலும் வேறு கதை. அதற்கும் வேலையில்லா பட்டதாரிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. பலரும் விஐபி2என்று சொல்லி வருகிறார்கள். விஐபி2 என்று தான் கேட்கிறார்களே தவிர நான் பார்ட் 2 என்று சொல்ல வில்லையே" என்றார்.