சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
ராதிகா சரத்குமார் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஜூலை 17 அன்று இப்படம் வெளிவர உள்ளது. ராதிகா சரத்குமார் தயாரிப்பாக இருந்தாலும் லைன் புரட்யூஸராக இருந்து தானே இப்படத்தைத் தயாரித்துக் கொடுத்தார் தனுஷ். அந்த அடிப்படையில், மாரி படத்தின் சாட்டிலைட் உரிமையை தனக்கு நெருக்கமான மூன்றெழுத்து சேனலுக்குக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். ராதிகாவோ தனுஷின் கோரிக்கையை நிராகரித்ததோடு, தனக்கு நெருக்கமாக உள்ள இரண்டெழுத்து சேனலுக்கு விற்றுவிட்டார். அதோடு, எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது என்பதையும் தனுஷிடம் கூறி உள்ளார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்ட தனுஷ், வேல்ராஜ் இயக்கத்தில் எமி ஜாக்ஸன், சமந்தாவுடன் தான் நடித்து வரும் விஐபி-2 படத்தின் சாட்டிலைட் உரிமையையும், தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும் ரௌடிதான் படத்தின் சாட்டிலைட் உரிமையையும் ராதிகா சொன்ன சேனலுக்கே விற்றுவிட்டாராம். இதன் மூலம் கூடுதலாக சில கோடிகளை கல்லா கட்டி இருக்கிறார் தனுஷ்.