ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அனாமிகா படத்தைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தில் அவருக்கும், ஜெயம்ரவிக்குமிடையே ஆக்சன் காட்சி கூட உள்ளது. அந்த வகையில், ஏற்கனவே ஆதிபகவன் படத்துக்கு நீத்துசந்திராவுடன் ஒரு பைட் சீனில் நடித்த ஜெயம்ரவி இப்போது மீண்டும் நயன்தாராவுடன் சண்டை காட்சியில் நடித்துள்ளார். இந்த நிலையில், கமலுடன் நடிக்கும் தூங்காவனம் படத்தில் த்ரிஷாவும் ஆக்சன் ரோலில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஹாலிவுட் ஆக்சன் படங்களுக்கு நிகராக அதிரடியான உருவாகும் இந்த படத்தில் த்ரிஷாவுக்கு போலீஸ் வேடம் என்றும் சொல்கிறார்கள்.