ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மைனா, சாட்டை, மொசக்குட்டி போன்ற படங்களை தயாரித்த ஷலோம் ஸ்டுடியோஸ் பிரமாண்டமாய் தயாரித்து வரும் படம் சவுகார்பேட்டை. ஸ்ரீகாந்த்-லட்சுமி ராய் நடிக்கும் இப்படம் ஒரு திகில் படமாக உருவாகி வருகிறது. வடிவுடையான் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சவுகார்பேட்டை படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, சென்னையை அடுத்த மயானம் ஒன்றில் படமாக்கப்பட்டது. இதில் ஸ்ரீகாந்த்தும், லட்சுமி ராயும் சுமார் 50 பேய்களுடன் சண்டை போடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதனை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படமாக்கினார். சுமார் 8 கேமராக்களை கொண்டு இந்த சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் மிரட்டலாக வந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு பேய் வந்தாலே அதகளப்படும் திகில் படங்களுக்கு மத்தியில் இப்படத்தில் 50 பேய்கள் வர இருக்கிறதாம். என்ன நடக்க போகிறதோ.?!