ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டோலிவுட்டின் வெற்றி நாயகன் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கு திரையில் மட்டுமல்லாது தமிழ் மற்றும் மலையாள திரைரசிகர்களும் ஏராளமாக உண்டு. அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்த S/O சத்யமூர்த்தி திரைப்படம் விமர்சனரீதியாக சறுக்கினாலும் வசூலில் சக்கை போடு போட்டது. அப்படத்திற்கு பின்னர் அல்லு அர்ஜுன் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இயக்குநர் பூபதி ஸ்ரீனு, நடிகர் பாலகிருஷ்ணா கூட்டணியில் வெளிவந்த லெஜண்ட் படத்தை தொடர்ந்து பூபதி அல்லு அர்ஜுனின் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். இசையமைப்பாளர் தமன் ரேஸ் குர்ரம் படத்திற்கு பின்னர் மீண்டும் அல்லு அர்ஜுன் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி உட்பட பிற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.