மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து பேய்ப் படங்களே ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இரண்டு காதல் படங்கள் வெளிவந்துள்ளன. நேற்று வெளியான சந்தானம் நாயகனாக நடித்துள்ள 'இனிமே இப்படித்தான்' படமும், ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள 'ரோமியோ ஜுலியட்' படமும் காதல் படங்களே. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் தன்னை காமெடியன் என்பதை மறந்து தன்னை ஒரு நாயகனாகவே காட்டிக் கொண்ட சந்தானம் அந்தப் படத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அப்படம் அவர் யார் என்பதை அவருக்கே உணர வைத்தது.
'இனிமே இப்படித்தான்' படத்தில் தன்னை ஒரு நாயகன் என்பதை மறந்து தான் ஒரு காமெடியன்தான் என்பதை மட்டுமே மனதில் வைத்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு, ரசிகர்களை சிரிக்கவும் வைத்திருக்கிறார். படம் நன்றாக இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், முதல் நாள் வசூல் குறைவாகவே இருக்கிறதாம். இது போகப் போக உயரும் என்கிறார்கள்.
ஜெயம் ரவி நடித்த 'பூலோகம்' படம் இன்னும் வெளிவராத நிலையில் அவர் நடித்து முடித்த மற்றொரு படமான 'ரோமியோ ஜுலியட்' படம் நேற்று வெளியானது. 'எங்கேயும் காதல்' படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி - ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். 'ரோமியோ ஜுலியட்' என்ற ஒரு அழகான காதல் ஜோடியின் டைட்டிலை வைத்து விட்டு படத்தில் காதலை கொச்சைப்படுத்தவே முயற்சித்திருக்கிறார்கள். தனக்கு பணம்தான் பெரிது, காதல் பெரிதில்லை என நினைக்கும் ஹன்சிகா கதாபாத்திரமும், காதலி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அவளைப் போலவே இன்னொரு பெண்ணைத் தேடிக் கொடுத்து விட்டு போ என காதலியிடமே சொல்லும் ஜெயம் ரவியின் கதாபாத்திரமும் காமெடியின் உச்சகட்டம். என்னதான் கிளைமாக்சில் காதலை உயர்த்திச் சொன்னாலும் அதற்கு முன்னர் சொன்ன விஷயங்கள் அனைத்துமே அபத்தம் என்கிறார்கள் ரசிகர்கள். 'ரோமியோ ஜுலியட்'டா 'வுடு ஜுட்' என்றுதான் ரசிகர்கள் சொல்வார்கள் என பேசிக் கொள்கிறார்கள்.