ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்த் திரையுலகில் தற்போது அனைத்துத் துறைகளிலும் பலப் பல புதுமுகங்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே கவனத்தை ஈர்க்கிறார்கள். அப்படி கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்திற்கு இசையமைத்த அரோல் கொரேலி. முதல் படத்திலேயே பாலாவின் தயாரிப்பு, மிஷ்கின் இயக்கம் என வாய்ப்பு கிடைத்தாலும் அந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலைத் தவிர வேறு பாடல்கள் இல்லாததால் பாடல்கள் மூலம் அரோல் கொரேலிக்கு ரசிகர்களை அதிகம் கவர முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் அந்தப் படத்தில் அவருடைய பின்னணி இசை அதிகம் பேசப்பட்டது, விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இருந்தாலும் சாதாரண ரசிகர்களிடம் அவரால் அதிகம் சென்றடைய முடியவில்லை.
இப்போது அவருக்கு பெயர் சொல்லும்படியாகவும், மீண்டும் அவருடைய திறமையை நிரூபிக்கும்படியும் அடுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹைக்கூ' படத்திற்கு அரோல் கொரேலிதான் இசையமைக்கிறார். நேற்று வெளியான இந்தப் படத்தின் டீசர் திரையுலகத்தினரையும், ரசிகர்களின் கவனத்தையும் நன்றாகவே ஈர்த்துள்ளது. சிறு குழந்தைகளை வைத்து மிகவும் யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசருக்கு அரோல் கொரேலி இசையமைத்துள்ள விதமும் கவர்ந்துள்ளது. இந்த 'ஹைக்கூ' மூலம் அரோல் கொரேலியின் பெயர் இனி அதிகம் ஒலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.