ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல யங் ஹீரோவான ராம் நடித்திருக்கும் புதிய படமான பண்டக சேசுகோ வரும் மே 29ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் முடிவடைந்து விட்டது. இந்த படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் கோபிசந்த் மலினேனி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறாராம். அதாவது இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்று கூறி இருக்கிறார். ஹீரோ ராமும் இந்த படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். ஏனெனில் அவருக்கு டோலிவுட்டில் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறாராம். அவருக்கு இந்த படத்தில் இரண்டு நாயகிகள். சோனல் சௌகான் மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது நினைவிருக்கலாம். இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார்