ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'மாஸ்' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சூர்யா இதுவரை நடிக்காத பேய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசரிலேயே சூர்யா பேயாக வருதைக் காட்டி விட்டார்கள். இருந்தாலும் படம் முழுவதும் அவரைப் பேயாகக் காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது அவர்களுக்கே கதை விவாதத்தின் போதே தோன்றியிருக்கலாம். அதனால், வழக்கமான மற்றொரு கமர்ஷியல் கதாபாத்திரத்திலும் சூர்யாவை நடிக்க வைத்திருக்கிறார்களாம்.
பேய் கதாபாத்திரத்தில் சூர்யா படத்தில் மொத்தமா 20 நிமிடங்கள் வரைதான் வருவார் என 'மாஸ்' படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீதிப் படத்தில் அதிரடியான மற்றுமொரு சூர்யாவைப் பார்க்கலாம் என்கிறார்கள். இந்த இரண்டு சூர்யாவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதையாம். படம் ஒரு த்ரில்லராக பரபரப்பாக நகரும் என்கிறார்கள்.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கில் படத்தை வெளியிட உள்ளார்கள். தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம். தமிழிலிருந்து தெலுங்குக்கு தற்போதைக்கு டப்பிங் செய்யப்படும் படங்களில் சூர்யாவின் படத்திற்குத்தான் வரவேற்பு அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். அவருக்கு தெலுங்கில் 'ஃபேன் பாலோயிங்' அதிகம் என டோலிவுட் வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.