ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
லாரன்ஸ் இயக்கி நடித்த படங்களில் காஞ்சனா படம்தான் மெகா ஹிட்டானது. இருப்பினும் அதன்பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கியபோது பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லை. லாரன்சேகூட எப்படியோ தப்பித்தால் போதும் என்கிற நிலையில்தான் இரண்டு ஆண்டுகளாக உருண்டு புரண்டு காஞ்சனா-2 படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால், அவர் நேரம் சூப்பராக இருந்தது. விளைவு, காஞ்சனா-2வும் மெகா ஹிட்டாகி விட்டது. இது லாரன்சுக்கு பன்மடங்கு எனர்ஜியாகி விட, இன்னும் இதேபோன்று பத்து படங்கள் வரை எடுப்பேன் என்று வரிந்து கட்டியுள்ளார். ஆனால் அவரது இந்த வெற்றிகளைப்பார்த்து இப்போது கோடம்பாக்கத்திலுள்ள பெரும்பாலான டைரக்டர்களும் பேய் கதைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.