ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திருமணத்திற்குப் பிறகு நடிப்பதைத் தொடராமல் குடும்பம், குழந்தைகள் என இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்த ஜோதிகா, எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த படம் '36 வயதினிலே'. மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஹௌ ஓல்ட் ஆர் யு' படத்தை ரீமேக் செய்து இங்கும் வெற்றி பெற்றார்கள். இதுவரை படம் சுமார் 8 கோடி வரை வசூலித்துள்ளதாகவும், மொத்தமாக 18 கோடி ரூபாய் வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களே அறிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்தப் படத்தை தெலுங்கிலும டப்பிங் செய்து வெளியிட முடிவெடுத்துள்ளார்களாம். ஜோதிகா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தவர்தான். சிரஞ்சீவி, நாகார்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். அவருக்கென அங்கும் ரசிகர்கள் உண்டு. அதனால், '36 வயதினிலே' படத்தை டப்பிங் செய்து வெளியிடலாம் என சூர்யா முடிவெடுத்துள்ளாராம். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளையும் ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது. இன்னும் சில வாரங்களில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.