ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டோலிவுட்டில் நடிகை அக்ஷா பார்தசனியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. சத்ருவு என்ற படத்தில் அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கு தற்போது மாஸ் மகாராஜ் ரவி தேஜாவின் புதிய படமான பெங்கால் டைகரில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அறிய வாய்ப்பு பற்றி அக்ஷா கூறும்போது, எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மிக முக்கியமானதாகும். பொன்னான வாய்ப்பாகும். இந்த படத்தில் எனக்கு என்ன வேடம் என்பது பற்றி தற்போது என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் படத்தில் மாஸ் மகாராஜா வரும் கட்சிகளில் எல்லாம் நானும் இருப்பேன். அவருடன் நடிப்பது என்பது மிகவும் பொழுதுபோக்கான விஷயமாகும். இந்த படத்தின் இயக்குனரான சம்பத் நந்தியை எனக்கு நன்றாக தெரியும். இந்த படத்தில் நடிப்பது எனக்கு ஒரு இனிமையான அனுபவமே என்றார். இந்த படத்தில் ரவி தேஜாவுக்கு அழகு தேவதையான தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஜோடி என்பது நினைவிருக்கலாம்.