ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மலையாளத்தில் ஆண்டுதோறும் ஏசியாநெட் விருதுகள் வழங்கப்படுகிறது. இதில் முதல்முறையாக தமிழ் நடிகர் விஜய் விருது பெறுகிறார்.
மலையாளத்தில் ஆண்டுதோறும் ஏசியாநெட் பிலிம் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தாண்டு 2010ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருதும், மற்றொரு மெகாஸ்டார் மோகன்லாலுக்கு கோல்டன் ஸ்டார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது பாடிகார்ட் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாரா அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இந்தவிருதுபட்டியலில் நமது இளைய தளபதி விஜய்யும் சேர்ந்துள்ளார். சிறந்த தமிழ் நடிகருக்கான விருது விஜய்க்கு அளிக்கப்பட உள்ளது. ஏசியன்நெட் விருது வரலாற்றில் ஒரு தமிழ் நடிகருக்கு விருது வழங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக மலையாளத்தில் விஜய்யின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் நடித்த படங்கள் அங்கு ஹிட்டும் ஆகியுள்ளது. மேலும் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்களின் ஆதரவும் பெருகி வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில், விஜய்க்கு சிலை வைத்து தமிழ் ரசிகர்களை மிஞ்சும் வகையில் செய்தனர்.
இந்த விழா வருகிற ஜன.,9ம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது.