ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமானவர் அகிலா கிஷோர். தற்போது இரண்டாம் உலகப்போர், சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இனிமே இப்படித்தான் படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்த நிலையில் அகிலா நடிப்பு மற்றும் போட்டோகிராபி கோர்ஸ் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு பறந்து சென்று விட்டார். ஹாலிவுட்டில் உள்ள பிரபல பயிற்சி நிலையலத்தில் 6 மாத பயிற்சி முடித்து விட்டு திரும்ப திட்டமிட்டிருக்கிறார்.
அகிலாவுக்கு, அமெரிக்கா புதிது கிடையாது. அவரது உறவினர்கள் அமெரிக்காவில் நிறைய உள்ளனர். அடிக்கடி அவர் அமெரிக்கா செல்வது வழக்கமான ஒன்று. இந்த முறை அவர் நடிப்பு பயிற்சிக்காக சென்றிருக்கிறார் என்பதுதான் புதிது.