ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
டிரைலர் வெளியிடுவதில் புதுமை காட்டிவரும் இந்த நேரத்தில் அதை வெளியிடும் நேரத்திலும் கூட புதுமை செய்துள்ளார்கள் பிருத்விராஜ் நடித்துள்ள 'இவிடே' படக்குழுவினர். ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் ஹீரோவாக, வருண் பிளாக்கி என்கிற போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பிருத்விராஜ். ஆனால் கதை நடப்பது இங்கல்ல.. அட்லாண்டாவில்.. அங்கே வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக பிருத்வியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள ஐ.டி நிறுவனங்களில் நடக்கும் தொடர் கொலைகளை துப்பறிந்து கண்டுபிடிக்கும் அட்லாண்டா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் பிருத்விராஜ். கதாநாயகியாக பாவனா நடிக்கும் இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் 'நேரம்' புகழ் நிவின் பாலி.. இதில் அவரது கேரக்டரின் பெயர் க்ரிஷ் ஹெப்பார். ஆனால் அவர் வில்லனாக நடிக்கும் விஷயம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தின் டிரைலரைத்தான் வரும் 1௦ஆம் தேதி காலை 1௦ மணி 1௦ நிமிடத்துக்கு (1௦:1௦:1௦) ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டீசர் கூட ஒரு லட்சம் லைக்குகளை அள்ளியிருக்கிறது.