ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சகுனி, அழகுராஜா, பிரியாணி என தொடர்ந்த தோல்விப்படங்களில் நடித்து வந்த கார்த்தி, சமீபகாலமாக மெட்ராஸ், கொம்பன் என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கொம்பன் படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் படம் 'காஷ்மோரா'. விஜய்சேதுபதியை வைத்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக முதன்முறையாக நயன்தாரா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக, ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். அழகுராஜா படத்துக்குப் பிறகு இரண்டு கதாநாயகிகள் உடன் நடிக்கிறார் கார்த்தி. இப்படத்தில் காமெடியனாக விவேக் நடிக்கிறார். கார்த்தியுடன் முதல்முறையாக இணைகிறார் விவேக்.