ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கு திரையில் மனம் எனும் வெற்றி படம் இயக்கிய இயக்குநர் விக்ரம் பிரபு, தற்போது கோலிவுட்டில் நடிகர் சூர்யாவின் 24 எனும் படத்தின் இயக்கத்தில் இறங்கியுள்ளார். நடிகர் சூர்யாவும் தனது மாஸ் படத்தை முடித்து விட்டு 24 படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகின்றார். தற்போதைய தகவலின் படி இப்படத்தில் நடிகர் சூர்யாவின் அண்ணாக தெலுங்கு திரையின் பிரபல குணசித்திர நடிகர் அஜய் நடிப்பதாகக் கூறப்படுகின்றது. இவர் தெலுங்கில் நிதினின் வெற்றி படமான இஷ்க் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முறையாக நடிகர் சூர்யாவுடன் தமிழ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் அஜய்க்கு முக்கியமாக கதாப்பாத்திரம் என்று படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே தமிழில் மலைக்கோட்டை, கிரீடம் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.