மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சனுஷா. தமிழில் இவர் அறிமுகமான 'ரேணிகுண்டா' படம் இவரை ஓரளவு பிரபலப்படுத்தினாலும், பார்ப்பதற்கு ரொம்ப சின்னப்பொண்ணு மாதிரி இருப்பதால், வாய்ப்புகள் கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து 'எத்தன்' படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து மலையாளத்திற்கே சென்றவர் திலீப் ஜோடியாக 'மிஸ்டர் மருமகன்' மற்றும் பிருத்விராஜுடன் 'சப்தமஸ்ரீ தஸ்கரா' ஆகிய படங்களில் நடித்தார்.
இப்போது கன்னடத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் அவரை தேடி வந்திருக்கிறது. சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் 'கபீரா' என்கிற வரலாற்றுப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சனுஷா. இந்த வருட ஆரம்பத்தில் வெளியான 'மிலி' படத்தில் நடித்திருந்த சனுஷாவுக்கு அடுத்ததாக மலையாளத்தில் 'நிர்நாயகம்' என்கிற படம் வெளியாக இருக்கிறது. இவரது தம்பியான சிறுவன் சனூப் தான், 'பெருச்சாழி' படத்தில் மோகன்லாலுடன் கிரிக்கெட் விளையாடியவர். சமீபத்தில் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் மம்முட்டியின் மகனாக நடித்தவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.