ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நேபாள நாட்டின் அரச குடும்பத்தில் பிறந்த நடிகை மனிஷா கொய்ராலா. இந்தி சூப்பர் ஸ்டார்கள் மட்டுமல்லாது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் அர்ஜுன் நடிக்கும் ஒரு மெல்லிய கோடு எனும் திரைபடத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். நேபாளத்தில் பிறந்து வளர்ந்தாலும் தற்போது நடிகை மனிஷா கொய்ராலா இந்தியாவில் வசித்து வருகின்றார். நேபாளத்தில் 3000க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய நிலநடுக்கத்தால் அந்நாடே உருக்குலைந்து விட்டது.
அண்டை நாடான நேபாளத்தில் நிலநடுக்கத்தின் பாதிப்புகளை சரி செய்ய இந்தியா பிரதமர் மோடி நேபாள அரசிற்கு உதவிக் கரம் நீட்டினார். இதனை அறிந்த நடிகை மனிஷா கொய்ராலா இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மனிஷா கூறுகையில், நேபாளத்தின் நிலநடுக்க சீற்குலைவுகள் என்னை துயரத்தில் ஆழ்த்தியுள்ளன. உடனடியாக நேபாளத்திற்கு செல்ல எண்ணினேன் ஆனால் விமான போக்குவரத்து தடை செய்யபடுள்ளதால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. நேபாளத்தில் விமான போக்குவரத்து சரியானதும், விரைவில் அங்கு செல்வேன். தக்க நேரத்தில் உதவி செய்த இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி என்றார்.