மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இப்படத்தை பிவிபி நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றது. மேலும் இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவும் கார்த்திக்கு இணையான கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். தற்போது நடிகை தமன்னா, நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்கு திரையில் வளர்ந்து வரும் நடிகருமான நாக சைதன்யாவுடன் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.கார்த்திகேயா எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கும் அடுத்த படத்தில் தமன்னா - நாக சைதன்யா ஜோடி இணையவுள்ளது. அண்மையில் திரைக்கு வந்த S/O சத்யமூர்த்தி எனும் படத்தில் லாபம் கண்ட தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணா இப்படத்தை தயாரிக்க ஒத்துக் கொண்டுள்ளார்.தமன்னா - நாக சைதன்யா ஜோடி ஏற்கனவே 100% ஆப் லவ் என்ற படத்தில் இணைத்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.