ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஆரம்ப காலத்தில் என்னை நிறைய ஹீரோயின்கள் நிராகரித்தார்கள் என்று வெளிப்படையாக கூறினார் சிவகார்த்திகேயன். அண்மையில் நடந்த ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறுகிறவர்களுக்கு ஹீரோயின்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். ஆரம்ப காலத்தில் என்னோடு நடிக்க மறுத்து, நிராகரித்த ஹீரோயின்கள் நிறைய இருக்கிறார்கள். பெரிய மனசு பண்ணி மான் கராத்தே படத்தில் ஹன்சிகா என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டபோது. என்ன ஹன்சிகா அவனோட நடிக்கப்போகுதா. அதுக்கு என்ன பைத்தியமா? ஏதாவது நல்ல டாக்டரா பார்க்க சொல்லுங்க" என்று கிண்டல் செய்தார்கள். இதுக்காக ஹீரோயின் இல்லாத கதையிலா நடிக்க முடியும்.