பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
மான்கராத்தே, அரண்மனை படங்களின் வெற்றிக்குப்பிறகு ஹன்சிகா நடித்த ஆம்பள, மீகாமன் படங்கள் எதிர்பார்த்த ஹிட் கொடுக்கவில்லை. இருப்பினும் கைவசம் பல படங்களை வைத்திருக்கும் அவர், தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துள்ள ரோமியோ ஜூலியட் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். இதற்கு முன்பு, ஜெயம்ரவியுடன் நடித்த எங்கேயும் காதல் படத்தை விட இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறும் ஹன்சிகாவுக்கு இப்படத்தில் பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய காட்சிகள் அதிகமாம். அதோடு, இதே படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள பூனம்பாஜ்வாவுடன் எதிரும் புதிருமான காட்சிகளும் அவருக்கு நிறைய உள்ளதாம். அதனால், முந்தைய படங்களை விடவும் இந்த படத்தில் தனது திறமையை அதிகப்படியாக வெளிப்பட்டிருப்பதாகவும் சொல்லிக்கொள்ளும் ஹன்சிகா, தற்போது ரோமியோ ஜூலியட் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதால், இந்த படம் தனக்கு வெற்றியாக அமைந்து, சரிந்து கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறி வருவதோடு, அதையடுத்து விஜய்யின் புலி தனக்கு இன்னும் பெரிய அளவிலான படங்கள் கிடைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கிறாராம்