மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
ஐ படத்தை அடுத்து விக்ரம் ஆக்சன் ரோலில் நடித்து வரும் படம் பத்து எண்றதுக்குள்ள. இந்த படத்தில் விக்ரமுக்கென்று பில்டப் பாடலும் உள்ளது. அதோடு ஒரு சண்டை காட்சியின் பின்னணியில் பாடல் ஒலிக்க விக்ரம் எதிரிகளை துவம்சம் செய்வது போன்ற அதிரடியான சண்டை பாடலும் இப்படத்தில் உள்ளது. ஆரம்பத்தில் சென்னையில் படப்பிடிப்பு நடத்திய விஜய்மில்டன், தற்போது படத்தின் கதை நேபாளம் வரை செல்வதால் க்ளைமாக்ஸ் காட்சிகளை நேபாளத்திலேயே ஒரு வார காலம் படமாக்கி விட்டு திரும்பியிருக்கிறார். அப்போது விக்ரம், சமந்தா நடித்த சில காதல் காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டதாம். மேலும், இதுவரை அப்படத்தில் ஒரேயொரு டூயட் பாடலை தவிர மற்றவை படமாக்கப்பட்டு விட்டதாம். அந்த டூயட் பாடலை ஏதாவது ஒரு வெளிநாடு சென்று படமாக்க திட்டமிட்டுள்ளாராம் விஜய் மில்டன். அதோடு, இந்த படத்தில் சமந்தாவுக்கு சவாலான காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்துள்ள இயக்குனர், விக்ரமுடன் அவர் நடனமாடும் டூயட் பாடல் காட்சியை அதிக ரொமான்டிக்காக படமாக்கப்போகிறாராம். தற்போது அவருக்கு தேவையான வித்தியாசமான காஸ்டியூம்கள் தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.