ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
ஆஹா கல்யாணம் படத்தை இயக்கியவர் கோகுல கிருஷ்ணா. இந்த படத்தில் நானி - பாலிவுட் நடிகை வாணி ஜோடியாக நடித்திருந்தனர். படமும் ஓரளவுக்கு பேசப்பட்டது. இந்த படத்துக்கு பிறகு கிருஷ்ணா படம் ஏதும் இயக்கவில்லை இதுபற்றி அவரிடம் கேட்டபோது நல்ல இயக்குனர்களுக்கும் நல்ல சினிமாவுக்கும் நம்ம இண்டஸ்ட்ரியில வாய்ப்பு லேட்டாதான் கிடைக்கும் அதனால் ஆஹா கல்யாணம் முடிந்ததும் வேறு ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து தயாரிப்பாளரை தேடியபோது கிடைத்தார். ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டது அதனால் தொடரமுடியவில்லை எனக்கு காமெடிதான் ஒத்துவரும் தற்போது அப்படிஒரு ஸ்கிரிப்ட் தயார்செய்து வைத்திருக்கிறேன். இந்தமாதிரி கதைகளுக்கு புதுமுகங்கள் செட்டாகமாட்டார்கள். ஏற்கனவே பிரபலமான ஹீரோக்கள் தான் பொருத்தமாகயிருக்கும் அப்படிப்பட்டவர்களிடம் பேசிவருகிறேன் முடிவானதும் முழுமையாக சொல்கிறேன் என்கிறார் கோகுல கிருஸ்ணா.