விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கவுள்ள 'தல-56' படம் தீபாவளி விருந்தாக வௌியாக இருக்கிறது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடிகர் அஜித், வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவின் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசனும், நித்யா மேனனும் நடிக்க இருக்கின்றனர். கூடவே தம்பி ராமைய்யா, பால சரவணன் ஆகியோர்களும் நடிக்க இருக்கிறார்கள். ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தின் படத்தை தயாரிக்கிறார் ஏ.எம்.ரத்னம்.
மகன் பிறப்பு, மூக்கில் ஆபரேஷன் போன்ற காரணங்களால் இரண்டு மாதம் ஓய்வில் இருந்த அஜித் இப்போது படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். அடுத்தமாதம், அதாவது அஜித்தின் பிறந்தநாள் முடித்த ஒருவாரம் கழித்து, மே 7ம் தேதி படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தொடர்ந்து இரண்டு-மூன்று மாதங்களுக்குள் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார் சிவா. அதோடு படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார். கடந்த 2013ம் ஆண்டு தீபாவளி விருந்தாக, தீபாவளிக்கு இருதினங்களுக்கு முன்னதாக ஆரம்பம் படம் வௌிவந்தது. அதன்பின்னர் 2014ல் பொங்கல் விருந்தாக வீரம் படம் வௌியானது. இப்போது இந்தாண்டு தீபாவளிக்கு அஜித்தின் படம் வௌியாக இருக்கிறது.
ஆக இந்தாண்டு அஜித்தின் ரசிகர்களுக்கு தல தீபாவளி தான்...!