ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து, வீரம் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்க இருக்கிறார் அல்லவா? அந்த படத்தின் நடிகர் நடிகை தேர்வு சூடுபிடித்திருக்கிறது. அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கவிருந்த சுருதி ஹாசன் நடிக்க முடியாத அளவுக்கு கோர்ட் தடை விதித்ததால் தற்போது தமன்னாவை கமிட் பண்ணி இருக்கிறார்கள். இந்த படத்தின் கதைப்படி அஜீத்தின் தங்கை கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளதாம். எனவே அஜித்துக்கு யாரை தங்கையாக நடிக்க வைக்கலாம் என யோசித்து சில நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. பிந்து மாதவியின் பெயரும் காமெடி நடிகையான வித்யூ ராமனின் பெயரும் பரிசீலனையில் இருந்திருக்கிறது.
நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வித்யூ ராமன். இவர் இதை தொடர்ந்து வீரம், ஜில்லா என பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து விட்டார். தற்போது கூட மாஸ் படத்தில் கூட நடித்து வருகிறார். ஆனாலும் அஜித்தின் தங்கை வேடத்தில் நடிப்பவர் அநியாயத்துக்கு குண்டு இருந்தால் காமெடியாகிவிடும், தவிர வித்யூ ராமன் செம குண்டு வேறு. எனவே, இவரை வேண்டாம் என முடிவு செய்துவிட்டு, பிந்துமாதவியை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் சிவா.
இது தெரியாமல், தனது டுவிட்டரில் ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கப்போவதாக ட்விட் பண்ணி இருக்கிறார் வித்யூ ராமன்.