ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
காமெடி நடிகர்களில், இப்போது சூரியின் காட்டில் தான் அடைமழை பெய்கிறது. ஓய்வு, உறக்கமின்றி, அரை டஜன் படங்களில் நடித்து வருகிறாராம்.
கோலிவுட்டை பொறுத்தவரை, எந்த காமெடி நடிகர் மார்க்கெட்டில் இருக்கிறாரோ, அவரை ஹீரோவுக்கு இணையாக, காதல், சண்டை, பாடல் காட்சிகளில் நடிக்க வைப்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இந்த வரிசையில், தற்போது சூரியும் சேர்ந்துள்ளார். 'அப்பாடக்கர்' படத்தில், 'ஜெயம்' ரவிக்கு, த்ரிஷா, அஞ்சலி என, இரண்டு ஹீரோயின்கள். ஆனால், சூரியும், அஞ்சலியும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அதிகம் வெளியாகியுள்ளன.
இதனால், 'சூரிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறாரோ' என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூரி தரப்போ, 'வயிற்றெரிச்சலை கிளப்பாதீங்க சார்; அஞ்சலியை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் தான் சூரி நடித்துள்ளார்' என்கிறது.