ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய கவர்ச்சி நடிகைகளில் அனுராதாவும் ஒருவர். ஜெயமாலினி, டிஸ்கோ சாந்தி ஆகியோருடன் இவரும் படத்துக்குப்படம் போட்டிபோட்டு கவர்ச்சி நடனமாடி வந்தவர். அதையடுத்து, தனது வாரிசான அபிநயஸ்ரீயையும் விஜய் - சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், மகளை தன்னைப்போல் இல்லாமல் கதாநாயகியாக்கவே ஆசைப்பட்டார் அனுராதா. ஆனால் ப்ரண்ட்ஸ் படத்தில் செகண்ட் ஹீரோயினியாக நடித்தபோதும், பின்னர் அபிநயஸ்ரீக்கு எதிர்பார்த்தபடி கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அம்மா வழியில் அவரும் அயிட்டம் நடிகையாக உருவெடுத்தார்.
ஆனபோதும், இவர் வந்த காலத்தில் கதாநாயகிகளே குத்துப்பாட்டுகளுக்கு ஆடத் தொடங்கியதால் அபிநயஸ்ரீயினால் பெரிதாக வளர முடியவில்லை. அதனால் அவ்வப்போது ஒரு படத்தில் தலைகாட்டி வரும் அவர், தற்போது விவேக் கதாநாயகனாக நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் படத்திலும் ஒரு பாடலுக்கு அயிட்டம் டான்ஸ் ஆடியுள்ளார்.