ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான சுவாமிநாதனின் மகன் அஸ்வின். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வில்லன் நான் கடவுள் ராஜேந்திரனின் குண்டு மகனாக நடித்தார். அதன் பிறகு பல படங்களில் ஹீரோக்களின் காமெடி நண்பனாக நடித்தார். கும்கி படத்தில் விக்ரம் பிரபு நண்பனாக நடித்தது நல்ல பெயரை கொடுக்கவே தன் பெயருக்கு முன்னால் கும்கியை சேர்த்து கும்கி அஸ்வின் ஆகிவிட்டார்.
தற்போது அப்பா தயாரிக்கும் அப்பாடக்கர் படத்தில் ஜெயம்ரவியுடன் காமெடியாக நடித்து வருகிறார். இது தவிர அதர்வா நடிக்கும் ஈட்டி, கணிதன், விஜய் வசந்த் நடிக்கும் புதிய படம் ஜிகினா, மகராணி கோட்டை, சிப்பாய் படங்களில் நடித்து வருகிறார்.
கருணாகரன், சதீஷ், செண்ட்ராயன், அர்ஜுன் என புதிய தலைமுறை காமெடியன்கள் தனி ரூட் பிடித்து சென்று கொண்டிருக்கும்போது அஸ்வின் தனியாக போராடி ஜெயித்து வருகிறார். ஆரம்பத்தில் அப்பாவின் செல்வாக்கிலேயே தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்தார். தற்போது அவரே தன் திறமையால், உழைப்பால் வாய்ப்புகளை பெற்று வருகிறார். நல்ல திறமையும் நம்பிக்கையும் உள்ள அஸ்வின் தனியாக போராடி ஜெயித்தால் அவரால் நிலைத்து நின்று நல்ல காமெடி நடிகராக வளரமுடியும் என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.