Advertisement

சிறப்புச்செய்திகள்

இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடஇந்தியாவில் லொகேசன் பார்க்கும் பிரபுசாலமன்!

20 மார், 2015 - 09:47 IST
எழுத்தின் அளவு:
Prabhu-Solomon-saw-locations-in-North-India

கிங், கொக்கி, லீ, லாடம் என நான்கு படங்களை இயக்கி ஐந்தாவதாக இயக்கிய மைனா படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் பிரபுசாலமன். அதையடுத்து, கும்கி, கயல் என ஹிட் படங்களை கொடுத்தார். மேலும், அவரது முதல் நான்கு படங்களும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும், அந்த படங்களை நன்றாகவே மேக்கிங் செய்திருந்தார் அவர்.


அந்த தனித்திறமைதான் மைனாவில் அவருக்க வெற்றியை தேடிக்கொடுத்தது. இந்நிலையில், அடுத்தடுத்து இரண்டு ஹிட்களை கொடுத்த பிரபுசாலமன், தனது புதிய படத்தை தனுஷை வைத்து இயக்குவது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் படத்தில் நடித்து முடித்ததும் ஜூன் மாதத்தில் இருந்து பிரபுசாலமன் படத்தில் நடிக்கிறாராம் தனுஷ்.


இந்தநிலையில், தனது படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்ட பிரபுசாலமன், தற்போது லொகேசன் பார்க்கும் வேலைகளில் தீவிரமடைந்திருக்கிறார். புதிய படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ரயிலில் நடக்கும் கதை என்பதோடு, வட இந்தியாவில்தான் கதைக்களம் அமைந்திருக்கிறதாம்.


அதனால், வட இந்தியாவில் அழகியல் நிறைந்த மலைப்பிரதேசங்களில் தற்போது அவர் லொகேசன் பார்த்து வருகிறார். காதல், ஆக்சன் கலந்த கதை என்பதால் ரயிலில் சண்டை காட்சியெல்லாம் உள்ளதாம். அதனால் படப்பிப்பு நடத்த ஏதுவான இடங்களை தேடிக்கண்டு பிடித்து வரும் அவர், மைனா, கும்கி, கயல் படங்களைப்போன்று மலை சார்ந்த பகுதிகளிலேயே அதிகமான காட்சிகளை படமாக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in