ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் ராஜபாட்டை, நான் ஈ, இரண்டாம் உலகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் தெலுங்கில் மூன்று படங்களையும் தயாரித்த பிரபல பட நிறுவனம் - பிவிபி சினிமா. தற்போது நாகார்ஜுனா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்து வரும் பிவிபி சினிமா நிறுவனம், அனுஷ்கா நடிப்பில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தையும் தயாரித்து வருகிறது. இதே படத்தை தெலுங்கில் சைஸ்ஜீரோ என்ற பெயரில் தயாரிக்கிறது.
இதை அடுத்து தனது 11 ஆவது தயாரிப்பாக ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபதி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக் இது. மிக பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராக உள்ள இப்படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பொம்மரிலு பாஸ்கர்.
தமிழரான இவர் தெலுங்குப்படத்துறையில் முன்னணி இயக்குநராக இருப்பவர். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது. சென்னையை அடுத்து பெங்களூர், புனே, காசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.