ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
ருத்ரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் ட்ரைலருக்கு விமர்சனமும் எழுந்துள்ளது. அதில் இடம்பெறும் சில காட்சிகள் அனுபவமே இல்லாதவர்களால் எடுக்கப்பட்டு இருக்குமோ என்று நினைக்கும் அளவிற்கு முதிர்ச்சியும், முழுமையும் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் அந்த ட்ரைலரும் சரிவர எடிட் செய்யப்படாமல் இருப்பதாகவே தோன்றுகிறது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் கொன கன்னரெட்டி காரெக்டரும் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகின்றது. நடிகை அனுஷ்காவும் மிகவும் சோர்வாக இருப்பதாகவே தெரிகிறது. மொத்தத்தில் அனைத்து குறைகளையும் சரி செய்து ட்ரைலரை வெளியிட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.