ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பிரபலமான இளம் ஹீரோவான நாக சைதன்யாவும், இயக்குனர் சந்து மோந்தேடியும் புதிய படத்தில் இணைகின்றனர். சந்து மோந்தேடியின் முதல் படமான கார்த்திகேயா மிகப்பெரிய வெற்றி பெற்றது நினைவிருக்கலாம். அவர் முதல் படத்திலேயே சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் எடுக்கும் அளவிற்கு ரிஸ்க் எடுத்தவர். அவர் சமீபத்தில் நாக சைதன்யாவை சந்தித்து கதை சொல்லி உள்ளார். அந்த கதை நாக சைதன்யாவிற்கு மிகவும் பிடித்து போக உடனடியாக அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் தற்போது டோக்சே என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் அந்த படத்தை முடித்து விட்டு இந்த புதிய படத்தில் நடிப்பார். விரைவில் இந்த படத்தின் அனைத்து விவரங்களும் வெளி வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.