சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
டார்லிங், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்த பென்சில் படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இவ்விரு படங்களில் நடித்து முடித்ததை அடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் நகைச்சுவை வேடமொன்றில் விடிவி கணேஷும் நடிக்கிறார். கேமியோ ஃபிலிம்ஸ் இந்தியா என்ற படநிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவரும் ஜி.வி.பிரகாஷ்குமார்தான்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா பிடத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் புதிய இணைப்பாக நடிகை சிம்ரனும் இணைந்திருக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்குகிறது. இந்த கேரக்டருக்காக தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்லிம் உடம்புக்கு மாறி செம யூத்தாக காட்சியளிக்கவிருக்கிறாராம்.