விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகையாக இருப்பவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் ஹன்சிகா. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து படப்பிடிப்புகளில் நடித்து வருகிறார். கிடைக்கும் ஓரிரு நாள் ஓய்வில் கூட மும்பைக்குப் பறந்து விடுவார். அவர் ஆதரவளித்து வளர்க்கும் குழந்தைகளுடன் தனது பொழுதைக் கழிப்பார்.
தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஹன்சிவாவிற்கு தற்போது மேலும் சில நாட்கள் படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் தனது தோழிகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். எந்த நாடுகளுக்கெல்லாம் செல்கிறார் என்பதைப் பற்றிய எந்தத் தகவலையும் வெளியில் சொல்லாத ஹன்சிகா அவ்வப்போது சுற்றுப் பயண புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார்.
அதில் ஒரு புகைப்படத்தில் டால்பின் ஒன்றிற்கு அவர் முத்தமிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “என்னுடைய சுற்றுப்பயணத்தில் ஆச்சரியமான ஒரு விஷயம். டால்பின் ஒன்றிற்கு நான் முத்தமிட்டது நினைவில் வைத்துக் கொள்ளக் கூட மிகப் பெரிய அனுபவம்,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.