ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற மனக்குறையை தவிர, மற்றபடி மனநிறைவாகவே இருக்கிறார் பாவனா. கடந்த 2௦13ல் பாவனா நடித்த 'ஹனி பீ' படம் மூணேகால் கோடியில் உருவாகி, 12 கோடியைத்தாண்டி வசூலித்து, போன வருடம் வெளியான 'ஆங்ரி பேபீஸ் இன் லவ்' படம் வெற்றிகரமாக ஐம்பது நாட்களை தொட்டது என மலையாளத்தில் பாவனாவின் ராசிக்கு ஒன்றும் குறைவில்லை.
தற்போது மலையாளத்தில் இவர் நடித்துவரும் படங்களில் ஒன்றுதான் கிருஷ்ணா பூஜப்புரா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வப்னத்தேக்கால் சுந்தரம்' (கனவை விட அழகானது) படம். பிசினஸ்மேன் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நகரத்தில் அடியெடுத்துவைக்கும் கிராமத்துப்பெண் ஒருத்தி, ஆரம்ப காலகட்டத்தில் திருமண பந்தத்தில் சந்திக்கும் பிரச்சனைகளும், பின்னர் ஒரு குடும்பத்தலைவியாக மாறி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார் என்பதும் தான் மையக்கதை..