ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்திய சினிமாவில் ஒரு படம் அந்த மொழியில் ஹிட்டாகி விட்டால் மற்ற மொழிக்காரர்கள் அதன் ரைட்சை வாங்கி ரீமேக் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியில் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் பேசப்பட்ட படம் பி.கே. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்து தயாரிக்க உள்ளார் இளைய தளபதி விஜய். அதனால் பி.கே. இந்தி ரைட்சை விஜய் தரப்பு வாங்கிருப்பதாக தகவல். படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது ஷங்கர் இயக்கலாம் என பேச்சு அடிபடுகிறது. வடக்கே சர்ச்சைகளை ஏற்படுத்திய இப்படம், தெற்கே எந்தளவுக்கு வெற்றி கொடுக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல அமீர் கான் நிர்வாணமாக நடித்த காட்சியை மாடுலேஷன் செய்து ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய உள்ளார்களாம்.
பி.கே. அங்கே ஓகே, இங்கே..?!