கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
பொங்கலுக்கு வெளியான விஷாலின் ஆம்பள படத்தில் நடித்தவர் மதுரிமா. இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக மதூரிமா நடித்திருந்தார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள மதுரிமா தற்போது ஜுனியர் என்.டி.ஆருடன் டெம்ப்பர் என்ற தெலுங்குப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மதுரிமா நடித்திருக்கும் டெம்ப்பர் தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இவர் நடித்த முதல் தமிழ் படம் சேர்ந்து போலாமா. வினய்க்கு ஜோடியாக கதாநாயகியாக இப்படத்தில் நடித்திருந்தார் மதுரிமா.
ஏனோ இப்படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால், அதற்கு முன்பாகவே விஷாலின் ஆம்பள படம் வெளியாகிவிட்டது. ஆம்பள படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்ததால் மதுரிமாவின் வேடம் கவனத்தை ஈர்க்கவில்லை. தவிர அவருக்கு சின்ன வேடம்தான்! என்றாலும் ஆம்பள படத்தில் நடித்ததால் மேலும் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் மதுரிமா.
தமிழ் மலையாளத்தில் ஹாசிம் மரைக்காயர் இயக்கும் க்ரைம் த்ரில்லரான நச் படத்தில் 12 முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. ஹீரோ, ஹீரோயின் என யாரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத இப்படத்தில் அந்த 12 கதாபாத்திரங்கள்தான் முக்கிய பங்கு வகிக்குமாம். அவற்றில் மதுரிமாவும் ஒருவர். மதுரிமா தவிர இப்படத்திற்காக மும்பையிலிருந்தும் சில கதாநாயகிகளை இறக்குமதி செய்திருக்கிறார்கள். மம்முட்டியின் உறவினரான மக்பூல் சல்மான் எனும் மலையாள நடிகர் இப்படத்தில் நடிக்கிறார்.