சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
ஸ்டைலிஷ் தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜுன் தான் எப்போதுமே முதல் இடத்தில் இருப்பார், படத்திற்கு படம் இவரின் ஸ்டைலான லுக்கை பார்த்தே பல நடிகர்கள் மிரண்டு போயிருந்தார்கள். தற்போது ”சன் ஆஃப் சத்யமூர்த்தி” என்று இவர் நடிக்கும் படத்திற்கு டைட்டில் வைத்துள்ளார்களாம். இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கப்போகும் இந்த படத்திற்கு டைட்டில் வைப்பதே பெரிய வேலையாக இருந்ததாம். முதலில் இப்படத்திற்கு திரிசூலம், ஜாதூகர் மற்றும் உஷாரு என்றெல்லாம் டைட்டிலை வைத்துள்ளார்கள் ஆனால் இறுதியாக இயக்குநரும், அல்லு அர்ஜுனும் சேர்ந்து சன் ஆஃப் சத்யமூர்த்தி என்ற டைட்டிலை இறுதியாக்கியுள்ளார்களாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது ஏப்ரலில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள், இதில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து சமந்தா, நித்யா மேனன், அத்ஹா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளார்கள். படத்தை தயாரிப்பது ராதாகிருஷ்ணன், படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.