ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கமர்ஷியல் படங்களை இயக்குகிறவர். சில காலம் படம் இயக்குவதை விட்டுவிட்டு நடிக்க கிளம்பி விட்டார். அங்காடி தெரு படத்தில் அண்ணாச்சியாக நடித்தது கொஞ்சம் பெயர் பெற்றுத் தரவே நடிப்பில் தீவிரமாக இருந்தார். அதன் பிறகு காலத்துக்கு ஏற்ற மாதிரி ரொம்ப நல்லவண்டா நீ என்ற காமெடி படத்தை இயக்கினார். இதில் மிர்சி செந்திலுடன் ஸ்ருதி பாலா என்ற புதுமுகம் நடித்தார்.
இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும்போதே சும்மா நச்சுன்னு இருக்கு என்ற காமெடி படத்தை இயக்கச் சென்று விட்டார். அந்தப் படத்தை குறுகிய காலத்தில் எடுத்து வெளியிட்டார். சட்டம் ஒரு இருட்டரை படத்தை ரீமேக் செய்த சினேகா பிரிட்டோ தயாரித்த படம். சும்மா நச்சுன்னு இருக்கு தோல்வி அடைந்ததும். ஏற்கெனவே இயக்கி வந்த ரொம்ப நல்லவண்டா நீ படத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
இப்போது மீண்டும் படத்தை தூசிதட்டி எடுத்து வெளியிட இருக்கிறார்கள். "என் படங்களில் எப்போதுமே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படம் முழுநீள நகைச்சுவையும் கொஞ்சமும் திரில்லும் கலந்த படம். முன்பின் அறியாத இரண்டு பேரின் 7 நாள் நட்பும், அது தொடர்பான சுவாரஸ்யங்களும்தான் கதை. இரண்டரை மணி நேர சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் படம். கவலை மறந்து சிரிக்க வைக்கிற படம்" என்கிறார் ஏ.வெங்கடேஷ்.